Web Informer Button

Creativity of Kovilpatti Traffic police

எங்கள் ஊர் போக்குவரத்துப் போலீசாரின் கிரியேட்டிவிட்டி...

பொதுவாக 'தலைக்கவசம் உயிர்கவசம்' என்ற அறிவிப்புப்பலகையைப் பார்த்திருப்போம். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வாசகமது.

கொரோனா லாக் டவுன் சமயத்தில், எங்கள் ஊரில் ஹெல்மெட் விழிப்புணர்வுடன், கொரோனா விழிப்புணர்வையும் இணைத்து 'தலைக்கவசம் + முகக்கவசம் = உயிர்கவசம்' என்ற புதிய பார்முலாவை அறிமுகம் செய்து, அதைப் போக்குவரத்து பேரிகார்டுகளில் வெளியிட்டனர்.

லாக் டவுன் சமயத்தில் எடுத்த புகைப்படம் இது. அப்போது கொரோனா பயத்தில் போஸ்ட் பண்ண வேண்டுமென்று தோன்றவில்லை. இப்போது பழைய புகைப்படங்களைத் தேடும் போது கிடைத்தது.

 எங்களூர் போக்குவரத்துப் போலீசாரின் கிரியேட்டிவிட்டியை இதன் மூலம் பாராட்டுகிறேன்... இது போல அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டால், மிகச்சிறந்த நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை...


No comments: