சாமி 2 படத்தில், ஒரு காட்சியில், டீக்கடையில் விக்ரமிடம் ஒருவர் ஜாதியைக் கேட்க முயற்சிக்கும் போது விக்ரம் அவரிடம் 'இன்னுமாடா ஜாதியெல்லாம் பாக்குறீங்க' என்று கேட்பது போல ஒரு வசனம் வரும்.
அது போல ஹேக்கர்ஸ் பல விதமான டெக்னாலஜி முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்னும் இப்படிப் பட்ட அந்தக்கால ஸ்பேம் மெயில்களை அனுப்பிக்கொண்டு தானிருக்கிறார்கள்.
BMWகாரன் எனக்கு எனக்கு சும்மா 3.55 லட்சம் பவுண்டுகள் தருகிறானாம். அவன் எந்த விதமான காரைத் தயாரிக்கலாம், எப்படி மார்கெட்டிங் பண்ணலாம், சேவை மையத்தை புதிதாக திறக்கலாமா என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பான்.
காலம் மாறினாலும் பழசை மறக்க கூடாது என்ற எண்ணம் கொண்ட ஹேக்கிங் கும்பலாக இருக்குமோ? அல்லது இன்னும் இப்படிப் பட்ட மெயில்களில் மக்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்களோ?
அடேய் ஹேக்கர் - உங்களது இந்தத் திறமைகளையெல்லாம் நன்மை செய்வதற்கு பயன்படுத்தலாமே?