Web Informer Button

Office meeting at Novotel

அலுவலக மீட்டிங் கடந்த வாரம் சென்னையிலுள்ள நோவோடெலில் நடந்தது. மீட்டிங்கில் கூறப்படும் முக்கியமான விஷயங்களை குறிப்பெடுத்துக்கொள்ள ஸ்கிரிப்ளிங் பேட் மற்றும் பென்சில்கள் தரப்பட்டிருந்தன.

பொதுவாக எனக்கு எதையும் குறிப்பெடுத்துக் கொள்வது மிகவும் பிடிக்கும். அதுவும் மீட்டிங் என்றால் அதில் விவாதிக்கப்படும் முக்கியமான விஷயங்களை குறிப்பெடுத்துக் கொள்வது மிகவும் பிடிக்கும். காரணம், பின்னாளில் அன்று என்ன நடந்தது என்பதை refer செய்ய வசதியாக இருக்கும். இல்லையென்றால் பல விஷயங்களை மறந்து விட வாய்ப்புள்ளது.

அப்படி ஒரு நிலைமையில் தான் இந்த மீட்டிங்கில் குறிப்பெடுக்கத் தயாராகிறேன்...

Creativity of Kovilpatti Traffic police

எங்கள் ஊர் போக்குவரத்துப் போலீசாரின் கிரியேட்டிவிட்டி...

பொதுவாக 'தலைக்கவசம் உயிர்கவசம்' என்ற அறிவிப்புப்பலகையைப் பார்த்திருப்போம். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வாசகமது.

கொரோனா லாக் டவுன் சமயத்தில், எங்கள் ஊரில் ஹெல்மெட் விழிப்புணர்வுடன், கொரோனா விழிப்புணர்வையும் இணைத்து 'தலைக்கவசம் + முகக்கவசம் = உயிர்கவசம்' என்ற புதிய பார்முலாவை அறிமுகம் செய்து, அதைப் போக்குவரத்து பேரிகார்டுகளில் வெளியிட்டனர்.

லாக் டவுன் சமயத்தில் எடுத்த புகைப்படம் இது. அப்போது கொரோனா பயத்தில் போஸ்ட் பண்ண வேண்டுமென்று தோன்றவில்லை. இப்போது பழைய புகைப்படங்களைத் தேடும் போது கிடைத்தது.

 எங்களூர் போக்குவரத்துப் போலீசாரின் கிரியேட்டிவிட்டியை இதன் மூலம் பாராட்டுகிறேன்... இது போல அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டால், மிகச்சிறந்த நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை...