எங்கள் பகுதியிலுள்ள ஒரு கடையில் சிங்கிள் பர்னர் LPG stove விற்றுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அனைவரும் LPG தட்டுப்பாடு மீம்ஸ்களைப் பார்த்து Induction stove வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இதை விற்கிறார்களே என்ற ஆர்வத்தில் சென்று பார்த்தால், அந்த அடுப்பிற்கு 'சிங்கம் சூர்யா' என்று பெயரிட்டிருக்கிறார்கள்...
'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்' என்று சிங்கம் படத்தில் அவர் டயலாக் பேசியதால், ஏதாவது ஒரு ஏசிக்கு சிங்கம் சூர்யா என்று பெயர் வைத்திருந்தாலாவது ஒரு லாஜிக் இருக்கும்...
சிங்கம் சூர்யாவிற்கும், அடுப்புக்கும் என்ன சம்பந்தம்? இந்த பெயர் காரணம் தெரிந்தவர்கள் அல்லது decode பண்ண முடிந்தவர்கள் கமெண்டில் சொல்லுங்களேன்... 😆
Full image captured by me is available below...
No comments:
Post a Comment