Web Informer Button

Singam Surya Single burner gas stove

எங்கள் பகுதியிலுள்ள ஒரு கடையில் சிங்கிள் பர்னர் LPG stove விற்றுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அனைவரும் LPG தட்டுப்பாடு மீம்ஸ்களைப் பார்த்து Induction stove வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இதை விற்கிறார்களே என்ற ஆர்வத்தில் சென்று பார்த்தால், அந்த அடுப்பிற்கு  'சிங்கம் சூர்யா' என்று பெயரிட்டிருக்கிறார்கள்...

'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்' என்று சிங்கம் படத்தில் அவர் டயலாக் பேசியதால், ஏதாவது ஒரு  ஏசிக்கு சிங்கம் சூர்யா என்று பெயர் வைத்திருந்தாலாவது ஒரு லாஜிக் இருக்கும்...

சிங்கம் சூர்யாவிற்கும், அடுப்புக்கும் என்ன சம்பந்தம்? இந்த பெயர் காரணம் தெரிந்தவர்கள் அல்லது decode பண்ண முடிந்தவர்கள் கமெண்டில் சொல்லுங்களேன்... 😆


Full image captured by me is available below...


New lights in Anna Centenary Library

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் காம்பவுண்ட் சுவர்களில் அழகுக்காக புதிதாக இந்த விளக்குகளை பொறுத்தியிருக்கிறார்கள். அதன் சிறப்பம்சம் என்னவென்றால் அந்த விளக்கின் நிழல்கள் ஆங்கிலத்திலுள்ள 'X' என்ற எழுத்தின் தோற்றத்தைக் கொடுக்கிறது...

வரிசையாக அதிக எண்ணிக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த விளக்கின் வெளிச்சமும், அதன் நிழலும் காண்பவர்களின் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்கின்றன... 😆

நம்மூரில் அரசு கட்டிடங்களில் இது ஒரு புது முயற்சி...

முதல் படம் : ஒரு விளக்கு மற்றும் அதன் நிழல்...
இரண்டாவது படம் : விளக்குகளின் வரிசை மற்றும் அதன் நிழல்கள்...

More photos full version below... 

Photo of single lamp:
Photo of series of lamps:

Thaarumaaru mistake...

'தாறுமாறு' என்ற வார்த்தையையே தாறுமாறாக்கிய அந்த பெயிண்டர்...
எங்கள் பகுதி லாரியொன்றில் நான் கண்ட காட்சி தானிது...

Corn or Coin

காசு குடுத்து வாங்குவதால் 'CORN' என்பதை 'COIN' என்று எழுதியிருந்தாலும் பெரிய தவறாக வாடிக்கையாளர்களுக்கு தெரியவில்லை போல!
சென்னை படூரிலுள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் நான் கண்ட காட்சி தானிது...