Web Informer Button

Dearness Allowance Drama (அகவிலைப்படி அராஜகம்)



தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10% உயர்த்தி, 100% வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அகவிலைப்படி என்பது நாட்டின் பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஒவ்வொரு நகரத்தின் வாழ்க்கை முறை மற்றும் செலவுகளை வைத்து கணக்கிடப்பட்டு இரண்டாம் உலகப் போர் காலம் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில், இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் என்னைப் போன்றவர்களுக்கு பல விடை தெரியா கேள்விகளை எழுப்புகிறது…


1) அகவிலைப்படியை 100% பெற்றுக்கொண்டு, விலைவாசி உயர்வை முதல்வர் கட்டுப்படுத்தவில்லை என்று அரசு ஊழியர்கள் எப்படி கூறலாம்? அதற்கு பதிலாகத் தானே இது?

2) விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படியை 100% பெற்றுக்கொண்டு, பெட்ரோல், ரேஷன், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும், சலுகைகளையும் அரசு ஊழியர்கள் எப்படி அனுபவிக்கலாம்?

3)  விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் பெறுகிறார்கள். தனியார் நிறுவன ஊழியர்கள் அப்படி எதுவும் பெறாமல் எப்படி விலைவாசி உயர்வை சமாளிப்பர்?

4) நஷ்டத்தில் இயங்கும் அரசே, அதன் ஊழியர்களுக்கு இவ்வளவு அகவிலைப்படியை வழங்க முடியும் போது, லாபத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் ஏன் வழங்க முடியாது?

5) அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தினால், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை சட்டமாக்க முடியாதா? அரசு ஊழியர்களை விட எந்த விதத்தில் நாங்கள் குறைந்தவர்கள்?

No comments: